நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவி
ஆயர் பால் சி. ஜோங்
நிரந்தரமான பாவ விடுதலை
【3-1】< யோவான் 8:1-12 >
யோவான் 8:1-12 >
"இயேசு ஒலிவமலைக்குப் போனார். மறுநாள் காலையிலே அவர் திரும்பி தேவாலயத்திற்கு வந்தபோது,ஜனங்களெல்லாரும் அவரிடத்தில் வந்தார்கள். அவர் உட்கார்ந்து அவர்களுக்கு உபதேசம் பண்ணினார். அப்பொழுது விபசாரத்திலே கண்டுபிடிக்கப்பட்ட ஒரு ஸ்திரீயை வேதபாரகரும் பரிசேயரும் அவரிடத்தில் கொண்டுவந்து,அவளை நடுவே நிறுத்தி: போதகரே,இந்த ஸ்திரீ விபசாரத்தில் கையும் மெய்யுமாய்ப் பிடிக்கப்பட்டாள். இப்படிப்பட்டவர்களைக் கல்லெறிந்து கொல்லவேண்டுமென்று மோசே நியாயப் பிரமாணத்தில் நமக்குக் கட்டளையிட்டிருக்கிறாரே,நீர் என்ன சொல்லுகிறீர் என்றார்கள். அவர் மேல் குற்றஞ் சுமத்துவதற்கான காரணம் உண்டாகும் பொருட்டு அவரைச் சோதிக்கும்படி இப்படிச் சொன்னார்கள். இயேசுவோ குனிந்து,விரலினால் தரையிலே எழுதினார். அவர்கள் ஔயாமல் அவரைக் கேட்டுக் கொண்டிருக்கையில்,அவர் நிமிர்ந்து பார்த்து: உங்களில் பாவமில்லாதவன் இவள்மேல் முதலாவது கல்லெறியக் கடவன் என்று சொல்லி,அவர் மறுபடியும் குனிந்து,தரையிலே எழுதினார். அவர்கள் அதைக் கேட்டு,தங்கள் மனச்சாட்சியினால் கடிந்து கொள்ளப்பட்டு,பெரியோர் முதல் சிறியோர் வரைக்கும் ஒவ்வொருவராய்ப் போய்விட்டார்கள். இயேசு தனித்திருந்தார்,அந்த ஸ்திரீ நடுவே நின்றாள். இயேசு நிமிர்ந்து அந்த ஸ்திரீயைத் தவிர வேறோருவரையுங் காணாமல்: ஸ்திரீயே,உன் மேல் குற்றஞ்சாட்டினவர்கள் எங்கே? ஒருவனாகிலும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கவில்லையா என்றார். அதற்கு அவள்: இல்லை,ஆண்டவரே,என்றாள். இயேசு அவளை நோக்கி: நானும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறதில்லை;நீ போ. இனிப் பாவஞ்செய்யாதே என்றார். மறுபடியும் இயேசு ஜனங்களை நோக்கி: நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன்,என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவ ஒளியை அடைந்திருப்பான் என்றார்."
- எவ்வளவு பாவங்களை இயேசு துடைத்தார்?
- உலகின் எல்லாப் பாவங்களையும்.
இயேசு நமக்கு நிரந்தர பாவ விடுதலையை அளித்தார். இயேசுவைத் தம் இரட்சகராக விசுவாசித்து பாவ விடுதலைப் பெறாத ஒருவனும் இல்லை. நம் அனைவரையும் அவர் விடுவித்தார். ஒரு பாவி தன் பாவங்களினால் அலைக்கழிக்கப்பட்டால் அது இயேசு தம் ஞானஸ்நானம் மூலம் அவனின் எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுவித்தார் என்று அவன் புரிந்து கொள்ளாததாலேயே.,
இரட்சிப்பின் இரகசியத்தை நாமெல்லாரும் அறிந்து அதனை விசுவாசிக்கவேண்டும். அவர் தம் ஞானஸ்நானம் மூலம் நம் எல்லாப் பாவங்களையும் சுமந்து நம் பாவங்களுக்கான தீர்ப்பையும் எற்றுக்கொண்டு நமக்காக அவர் சிலுவையில் மரித்தார். ,
நீர் மற்றும் ஆவியிலான இரட்சிப்பை நீங்கள் விசுவாசிக்க வேண்டும்: அது நம் அனைத்துப் பாவங்களுக்கான நிரந்தர விடுதலையாகும். உன்னை ஏற்கெனவே நீதிமானாக்கிய அவரின் பெரிதான அன்பை நீ விசுவாசிக்க வேண்டும். உன்னுடைய இரட்சிப்பிற்காக அவர் யோர்தான் நதியிலும் சிலுவையிலும் செய்தவற்றை விசுவாசி.,
இயேசுவிற்கு நம் மறைவான பாவங்களும் கூடத்தெரியும். சில மக்கள் பாவங்குறித்து தப்பாக புரிந்து கொண்டுள்ளனர். அவர்கள் சில பாவங்களிலிருந்து விடுதலை பெறமுடியாது என்று நினைக்கிறார்கள். இயேசு எல்லாப் பாவங்களிலிருந்தும் ஒன்று விடாமல் விடுதலை செய்தார்.,
இவ்வுலகில் அவர் விட்டு விட்டப் பாவங்கள் ஒன்று கூட இல்லை. அவர் உலகின் எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுதலை அளித்ததால்,பாவிகள் இல்லவே இல்லை. உன்னுடைய எதிர்கால பாவங்கள் உட்பட உன் எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுதலைச் செய்த நற்செய்தியைக் குறித்து உனக்குத் தெரியுமா?அதனை விசுவாசித்து இரட்சிக்கப் படுவாயாக. மேலும் கர்த்தரின் மகிமைக்குத் திரும்புவாயாக.,
விபசாரத்தில் பிடிபட்ட பெண்,
- இவ்வுலகில் எத்தனை பேர் விபசாரம் செய்கிறார்கள்?
- அனைவரும்.
யோவான் 8 இல்,விபசாரத்தில் பிடிபட்ட பெண் இருக்கிறாள். அவள் இயேசுவினால் எப்படி இரட்சிக்கப் பட்டாள் என்று காண்கிறோம். அவள் பெற்ற கிருபையில் பங்கு பெற விரும்புகிறோம். மனிதர்கள் அனைவரும் தம் வாழ்நாளில் விபசாரத்தில் ஈடுபட்டுள்ளார்கள் என்பது அதிகமில்லையா. எல்லா ஆத்துமாக்களும் விபசாரம் செய்கின்றன.,
,அது அப்படித் தெரியவில்லையென்றால்,அதற்கான ஒரே காரணம், அதனை நாம் தொடர்ந்து செய்வதால்,அதனைச் செய்யாதது போல் தெரிவதே. ஏன்?நம் வாழ்வில் அத்தனை விபசாரத்துடன் வாழ்கிறோம்.,
அப்பெண்ணைப் பார்த்ததுடன் நம்மில் விபசாரம் செய்யாதவர்கள் யாருமில்லையா என்று மனதில் நினைத்தேன். விபசாரத்தில் பிடிபட்ட அப்பெண்ணைப் போன்றே விபசாரம் செய்யாத மனிதர்கள் யாருமேயில்லை. நாமெல்லாருமே அப்படி செய்தாலும் எதுவும் செய்யாதது போல் காட்டிக்கொள்கிறோம்.,
நான் கூறுவது தவறு என்கிறாயா?இல்லை, நான் தவறாக கூறவில்லை. உன்னுள் கவனமாகப் பார். உலகின் மீதுள்ள எல்லோரும் அதனைச் செய்துள்ளார்கள். அவர்கள் தெருவில் செல்லும் பெண்களைப் பார்க்கும்போது,அவர்கள் நினைப்பிலும்,செய்கையிலும், எந்நேரத்திலும்,எங்கும் விபசாரம் செய்கிறார்கள்.,
அதனைச் செய்வதாக அவர்கள் அறிவதில்லை. தாம் வாழ்ந்திருந்த நாட்களெல்லாம் எண்ணிலடங்காத முறை விபசாரம் செய்ததை தாம் மரிக்கும் நாளிலே மட்டும் உணர்ந்து கொள்ளும் அநேக மனிதர்கள் இருக்கின்றனர். பிடிபட்டவர்கள் மட்டுமல்ல, பிடிபடாத நாமனைவரும் கூட அப்படியே. எல்லா மக்களும் அதனைத் தம் மனதிலும் செய்கையிலும் செய்கின்றனர். இது நம் வாழ்வின் ஔர் அங்கமில்லையா?
,நீ குழம்பிவிட்டாயா?இதுவே உண்மையாகும். நாம் கூச்சமடைந்துவிட்டதால் இதனைத் தவிர்க்கிறோம். மக்கள் இக்காலத்தில் எப்பொழுதும் விபசாரத்தில் ஈடு பட்டிருக்கிறார்களென்றும் ஆனால் அதனை அவர்கள் உணருவதில்லை என்றும் நம்புகிறேன்.,
மக்கள் தம் ஆத்துமாக்களிலும் விபசாரம் செய்கிறார்கள். கர்த்தரால் படைக்கப்பட்ட நாம்,நம் ஆத்துமாக்களில் விபசாரம் செய்வதை அறியாமலேயே இப்பூமியில் வாழுகிறோம். மற்ற தேவர்களை ஆராதிப்பது ஆவிக்குரிய விபசாரம். ஏனெனில் கர்த்தரே மனிதர்கள் அனைவரின் மணவாளன்.,
விபசாரத்தில் பிடிபட்ட பெண் நம்மைப் போன்றே மனிதகுலத்தவள், நாம் விடுவிக்கப்பட்டது போல் அவள் கிருபைப் பெற்றாள். ஆனால் கபட்டு பரிசேயர்கள் அவளைத் தம் மத்தியில் நிறுத்தி,அவர்களே நீதிபதி போன்று அவளை நோக்கி கைக்காட்டி அவள் மீது கல்லெறிய தயாராயிருந்தார்கள். அவர்கள் தாம் சுத்தமானவர்கள் என்பது போலும் தாம் விபசாரத்தில் ஈடுபடவே இல்லை என்பது போலும் நினைத்து,அவளை மேற்கொண்டு அவளைத் தீர்க்க தயாராக இருந்தனர்.,
உடன் கிறிஸ்தவர்களே,தாமொரு பாவக்குவியல் என்றறிந்தவர்கள் கர்த்தர் முன் மற்றவர்களைத் தீர்ப்பதில்லை. மாறாக,அவர்களுக்குத் தாம் தம் வாழ்நாள் முழுவதும் விபசாரம் செய்வதை அறிந்திருப்பதால்,நம் அனைவரையும் விடுதலை செய்த கர்த்தரின் கிருபையைப் பெறுவார்கள். எப்போதும் விபசாரம் செய்யும் பாவிகள் என்று உணர்ந்து கொள்பவர்கள் கர்த்தர் முன்பாக விடுதலைப் பெற தகுதியானவர்கள்.,
கர்த்தரின் கிருபையைப் பெற்றுக்கொள்வது யார்?
- கர்த்தரின் கிருபையைப் பெறுவது யார்?
- மதிப்பேதுமில்லாதவன்.
விபசாரமே செய்யாது சுத்தமாக வாழும் ஒருவன் அவரின் கிருபையைப் பெறுவானா அல்லது அப்படிச் செய்யும் மதிப்பில்லாதவன் அவர் கிருபையைப் பெறுவானா?அப்படிச் செய்யும் ஒருவனே அவரின் விடுதலைக்கான அளவு கடந்த கிருபையைப் பெறுபவன். தமக்குத்தாமே உதவிக்கொள்ள முடியாதவர்கள்,பலவீணமான மற்றும் உதவியற்றவர்கள் விடுதலைப் பெறுவார்கள். அவர்களே அவர் கிருபையிலுள்ளவர்கள்.,
தம்மிடம் பாவமில்லை என்று நினைப்பவர்களை விடுவிக்க முடியாது. விடுவிக்க ஏதுமில்லாத போது விடுதலைக்கான கிருபையை அவர்கள் எப்படி பெற்றுக்கொள்ள முடியும்?
வேதபாரகரும் பரிசேயரும் விபசாரத்தில் பிடிபட்ட பெண்ணை இயேசுவிடம் இழுத்து வந்து அவளை நடுவில் நிறுத்தி அவரிடம் கேட்டனர்,"போதகரே,இந்த ஸ்திரீ விபசாரத்தில் கையும் மெய்யுமாய்ப் பிடிக்கப்பட்டாள்,நீர் என்ன சொல்லுகிறீர்?”அவர்கள் அப்பெண்ணை அவருக்கு முன் கொண்டு வந்து அவரை ஏன் சோதித்தார்கள்?
அவர்களோ அநேக முறை விபசாரம் செய்துள்ளனர்,ஆனால் அவளைத் தீர்க்கவும் இயேசுவின் மூலம் கொல்லவும் முயற்சித்து அப்பலியை அவர் மீது சுமத்தவும் முயற்சி செய்தனர்.,
இயேசுவிற்கு அவர்கள் மனதிலுள்ளது தெரியும்,அப்பெண்ணைக் குறித்து சகலமும் அறிந்திருந்தார். ஆகவே அவர் கூறினார், “உங்களில் பாவமில்லாதவன் இவள் மேல் முதலாவது கல்லெறியக் கடவன்.” பிறகு வேதபாரகரும் பரிசேயரும்,மூத்தவர்கள் முதல் இளையவர்கள் வரை அனைவரும் ஒவ்வொருவராகப் போய்விட்டனர். மீதிருந்தது இயேசுவும் அப்பெண்ணும் மட்டுமே.,
மதத்தலைவர்களான வேதபாரகரும்,பரிசேயருமே நழுவியவர்கள். அவர்கள் தாம் பாவிகள் இல்லை என்பது போல் விபசாரத்தில் பிடிபட்ட அப்பெண்ணைத் தீர்க்கவிருந்தார்கள்.,
இயேசு இவ்வுலகில் தம் அன்பைப் பிரகடனப் படுத்தினார். அவரே அன்பின் உருவம். இயேசு மனிதர்களுக்கு உணவளித்தார்,இறந்தவர்களை உயிரோடெழுப்பினார்,விதவையின் மகனின் உயிரைத் திரும்பப் கொடுத்தார். லாசருவை உயிரோடெழுப்பினார்,குஷ்டரோகிகளைச் சுகமாக்கினார். ஏழைகளுக்கு அநேக அற்புதங்களைச் செய்தார். அவர் அனைத்துப் பாவிகளிடமிருந்தும் எல்லாப் பாவங்களையும் எடுத்துப் போட்டு அவர்களுக்கு இரட்சிப்பை அளித்தார்.,
இயேசு நம்மை நேசிக்கிறார். அவர் மகத்துவமுள்ளவரான படியால் அவருக்கு எதையும் செய்யமுடியும்,ஆனால் பரிசேயரும் வேதபாரகரும் அவரைத் தம் எதிரியாக நினைத்தனர். அதனாலேயே அப்பெண்ணை அவர் முன் கொண்டு வந்து அவரைச் சோதித்தனர்.,
அவர்கள் கேட்டனர்,"போதகரே,இப்படிப் பட்டவர்களைக் கல்லெறிந்து கொல்ல வேண்டுமென்று மோசே நியாயப் பிரமாணத்தில் நமக்குக் கட்டளையிட்டிருக்கிறாரே,நீர் என்ன சொல்லுகிறீர்?”அவர் கல்லெறியச் சொல்வார் என்று நினைத்திருந்தனர். ஏன்? கர்த்தரின் சட்டத்தில் எழுதப்பட்டுள்ளதன்படி நாமெல்லாரும் தீர்க்கப்படவேண்டுமானால், விபசாரம் செய்த அனைத்து மனிதர்களும்,யாரையும் தவிர்க்காது,கல்லெறிந்து கொல்லப்பட வேண்டியவர்களே.,
எல்லோரும் கல்லெறியப்பட்டு மரித்து நரகம் செல்ல வேண்டியவர்கள். பாவத்தின் சம்பளம் மரணம். ஆயினும் இயேசு அவர்களைக் கல்லெறியும்படிக் கூறாமல்,"உங்களில் பாவமில்லாதவன் இவள் மேல் முதலாவது கல்லெறியக் கடவன்",என்று கூறினார்.,
- கர்த்தர் ஏன் 613 பிரிவுகளுள்ள சட்டத்தை நமக்குத் தந்தார்?
- நாம் பாவிகளென்று நம்மைப் புரியச் செய்யவே.
சட்டம் கோபாக்கினையை கொண்டு வருகிறது. கர்த்தர் பரிசுத்தமானவர் அது போன்றதே அவர் சட்டமும். இந்த பரிசுத்தமான சட்டம் 613 பகுதிகளாக நம்மிடம் வந்தது. இந்த 613 பகுதிகளுள்ள சட்டத்தைக் கர்த்தர் நமக்குக் கொடுத்தற்கான காரணம்,நாம் பாவிகளென்றும் குறையுள்ளவர்கள் என்றும் நம்மைப் புரியச் செய்யவே. நாம் விடுதலைப் பெறும் பொருட்டு கர்த்தரின் கிருபையை நோக்க வேண்டுமென அது போதிக்கிறது. இது நமக்குத் தெரியாமல், எழுதப்பட்டுள்ளதை மட்டுமே நாம் சிந்தித்தால் விபசாரத்தில் ஈடுபட்ட அப்பெண்ணைப் போன்றே நாம் அனைவரும் கல்லெறிந்து கொல்லப்படவேண்டியவர்கள்.,
வேதபாரகரும் பரிசேயரும் அவருடைய சட்டத்தின் உண்மையைத் தெரியாதவர்களானபடியால் அப்பெண்ணை நாமுட்பட எல்லோரும் கல்லெறியலாம் என்று நினைத்திருக்கலாம். உதவியற்ற பெண் மீது யாரால் கல்லெறிய முடியும்? அவள் விபசாரத்தில் பிடிபட்டிருந்தாலும் கூட,இவ்வுலகிலுள்ள யாராலும் அவள் மீது கல்லெறிய முடியாது.,
அப்பெண்ணும் நம்மில் ஒவ்வொருவரும் சட்டப்படி தீர்க்கப் படவேண்டியவர்கள் என்றால்,நாமும் அப்பெண்ணும் பயங்கரமான ஔர் தீர்ப்பைப் பெறுவோம். ஆனால் பாவிகளாகிய நம்மை,நம்முடையப் பாவங்களிலிருந்தும்,நியாயத்தீர்ப்பிலிருந்தும் இயேசு இரட்சித்தார். நம்முடைய எல்லாப் பாவங்களுக்கும் நாம் கர்த்தரின் சட்டமானது சொற்படி உபயோகிக்கப்பட்டால், நம்மில் யாரால் உயிருடனிருக்க முடியும்?நம்மில் ஒவ்வொருவரும் நரகத்தில் முடிவடைந்திருப்போம்.,
ஆனால் வேதபாரகருக்கும் பரிசேயருக்கும் சட்டமானது எழுதப்பட்டுள்ளதைப் போன்றே தெரியும். அச்சட்டம் சரியாக உபயோகிக்கப்பட்டால் அவனால் தீர்க்கப்பட்டவள் உட்பட அவனையும் அது கொல்லும். குறிப்பாக கர்த்தரின் சட்டம் மனிதர்களுக்கு கொடுக்கப்பட்டதன் காரணம் அவர்கள் தம் பாவத்தைக் குறித்து அறிந்து கொள்ளவே,ஆனால் அதனைத் தவறாகப் புரிந்து தவறாக உபயோகப் படுத்தியதால் அவர்கள் துன்புற்றனர்.,
இக்கால பரிசேயரும் வேதாகம பரிசேயரைப் போல் எழுதப்பட்டுள்ளதைப் போன்றே சட்டமறிந்தவர்கள். அவர்கள் கர்த்தரின் கிருபையும், நீதியையும் அவரின் சத்தியத்தையும் புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் இரட்சிக்கப்படும்படியாக விடுதலையின் நற்செய்தியை அவர்களுக்கு போதிக்கவேண்டும்.,
பரிசேயர் கூறினர், “இப்படிப்பட்டவர்களைக் கல்லெறிந்து கொல்லவேண்டுமென்று நியாயப் பிரமாணத்தில் நமக்கு கட்டளையிடப் பட்டிருக்கிறதே. நீர் என்ன சொல்லுகிறீர்?” கையில் கற்களை வைத்துக் கொண்டு நம்பிக்கையுடன் கேட்டனர். அதனைக் குறித்து கூறுவதற்கு இயேசுவிடம் எதுவுமில்லை என்று அவர்கள் நினைத்திருந்தனர். தம்முடையவைகளை எடுத்துக்கொள்ள இயேசுவிற்காக காத்திருந்தனர்.,
சட்டத்தின்படி இயேசு நியாயந்தீர்த்திருந்தால்,அவரும் கூட அவர்களால் கல்லெறியப்பட்டிருப்பார். அவர்களுடைய நோக்கம் இருவர் மீதும் கல்லெறிவதாயிருந்தது. அப்பெண்ணின் மீது கல்லெறிய வேண்டாம் என்று இயேசு கூறியிருந்தால்,கர்த்தரின் சட்டத்தை இயேசு இழிவுப்படுத்திவிட்டார் என்றும்,இந்த அவதூறுக்காக அவர் மீது கல்லெறிந்திருப்பர். அது எத்தனை பயங்கரமான திட்டம்!.,
ஆனால் இயேசு குனிந்து தரையில் தம் விரல்களால் எழுதினார், அவர்கள் தொடர்ந்து அவரிடம் கேட்டுக்கொண்டிருந்தனர், “நீர் என்ன கூறுகிறீர்?நீர் தரையில் எழுதுவது என்ன? எங்களுடைய கேள்விக்கு பதில் கூறும். நீர் என்ன சொல்லுகிறீர்?” அவர்கள் தம் கையினால் இயேசுவைச் சுட்டிக்காட்டி அவரை இம்சித்தனர்.,
இயேசு எழுந்து அவர்களிடம் உங்களில் பாவமில்லாதவன் அவள் மீது முதலில் கல்லெறியட்டும் என்று கூறினார். பிறகு மீண்டும் குனிந்து தரையில் தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்தார். அதனைக் கேட்டவர்கள்,தம் மனசாட்சியினால் உறுத்தப்பட்டு,வயதானவர்கள் முதல் இளையவர்கள் வரை,ஒவ்வொருவராக போய்விட்டனர். அப்பெண் அவர் பிரசன்னத்தில் நின்றிருக்க,இயேசு தனிமையில் விடப்பட்டார்.,
"உங்களில் பாவமில்லாதவன் எவனோ,அவன் இவள் மீது முதலில் கல்லெறியட்டும்"
- பாவங்கள் எங்கு பதிவு செய்யப்பட்டுள்ளன?
- இருதயப் பலகையிலும் செய்கையின் புத்தகத்திலும்.
இயேசு அவர்களிடம் கூறினார்,"உங்களில் பாவமில்லாதவன் இவள் மேல் முதலாவது கல்லெறியக் கடவன்",அவர் தொடர்ந்து தரையில் எழுதிக் கொண்டிருந்தார். அப்பொழுது இரண்டொரு வயதானவர்கள் போகத் தொடங்கினர். அதிகப் பாவம் செய்த வயதானவர்கள் முதலில் போயினர். இளையவர்களும் கூட சென்றுவிட்டனர். இயேசு நம்மிடம் இருக்கிறாரென்றும் நாம் பெண்ணைச் சுற்றிலும் நிற்பதாகவும் கொள்வோம். இயேசு நம்மிடம், உங்களில் பாவமில்லாதவர்கள் இவள் மீது முதலில் கல் வீசட்டும் என்றால்,நீ என்ன செய்திருப்பாய்?
இயேசு தரையில் என்ன எழுதிக்கொண்டிருந்தார்?நம்மைப் படைத்த கர்த்தர் நம் பாவங்களை இரண்டு இடங்களில் எழுதுகிறார்.,
முதலில்,நம் இருதயப் பலகையில் நம் பாவங்களை எழுதுகிறார். "யூதாவின் பாவம் இரும்பெழுத்தாணியினாலும்,வைரத்தின் நுனியினாலும் எழுதப்பட்டு,அவர்களுடைய இருதயத்தின் பலகையிலும் உங்கள் பலிபீடங்களுடைய கொம்புகளிலும் பதிந்திருக்கிறது” (எரேமியா 17:1),
நம்முடைய பிரதிநிதியான யூதேயாவின் மூலம் கர்த்தர் நம்முடன் பேசுகிறார். மனிதர்களின் பாவங்கள் இரும்பெழுத்தாணியினாலும், வைரத்தின் நுனியினாலும் எழுதப்பட்டுள்ளது. அவை நமது இருதயப் பலகையில் எழுதப்பட்டுள்ளன. இயேசு குனிந்து மனிதர்கள் பாவிகள் என்று தரையில் எழுதினார். ,
கர்த்தருக்கு நாம் பாவம் செய்வோம் என்று தெரியுமாகையால் பாவங்களை நம் இருதயப்பலகையில் எழுதுகிறார். முதலில் நம் செய்கைகள் நாம் செய்யும் பாவங்களை எழுதுகிறார். ஏனெனில் சட்டத்திற்கு முன்னால் நாம் உடைந்து போகக் கூடியவர்கள். பாவங்கள் நம் இருதயத்தில் எழுதப்பட்டுள்ளதால்,சட்டத்தை நாம் பார்க்கும்போது நாம் பாவிகள் என்பதை உணர்ந்து கொள்கிறோம். அவர் அவற்றை நம் இருதயத்தில்,மனசாட்சியில் எழுதியிருப்பதால்,அவருக்கு முன்பாக நாம் பாவிகள் என்பது நமக்குத் தெரியும்.,
தரையில் எழுதுவதற்காக இயேசு இரண்டாம் முறை குனிந்தார். கர்த்தருக்கு முன்பாக செய்கையின் புத்தகத்தில் நம் எல்லாப் பாவங்களும் எழுதப்பட்டுள்ளதாக வேதாகமம் கூறுகிறது. (வெளி 20:12). அப்புத்தகத்தில் ஒருவனின்/ஒருத்தியின் பெயரும் அவனின்/அவளின் பாவங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவை அம்மனிதனின் இருதயப் பலகையிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. நம்முடைய பாவங்கள் செய்கையின் புத்தகத்திலும் நம் இருதயப் பலகையிலுமாக இரண்டு முறை பதிவு செய்யப்பட்டுள்ளது.,
இளையவர்களோ அல்லது வயதானவர்களோ,பாவங்கள் எல்லோருடைய இருதயப்பலகையிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனாலேயே இயேசுவின் முன் அவர்களின் பாவத்தைக் குறித்து அவர்கள் கூற அவர்களிடம் எதுமிருக்கவில்லை. அப்பெண்ணின் மீது கல்லெறிய முயன்றவர்கள் அவர் வார்த்தைகள் முன்பு உதவியற்றவராயினர்.
- இரண்டு இடங்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ள பாவங்கள் எப்போது அழிக்கப்படும்?
-
- நம்மிருதயத்தில் நீர் மற்றும் இயேசுவின் இரத்தத்தினால் வரும் பாவவிடுதலையை எற்றுக்கொள்ளும்போது.
ஆயினும்,நீ இரட்சிப்பைப் பெற்றுக் கொள்ளும்போது,செய்கையின் புத்தகத்திலுள்ள உன் பாவங்களெல்லாம் அழிக்கப்பட்டு உன் பெயர் ஜீவ புத்தகத்தில் எழுதப்படும். ஜீவப் புத்தகத்தில் யாருடைய பெயர் காணப்படுகிறதோ அவர்கள் பரலோகம் செல்வர். அவர்களுடைய நற்செயல்களும், கர்த்தரின் ராஜ்யத்திற்காக அவர்கள் இவ்வுலகில் செய்தவைகளும், அவனின் நீதியும் ஜீவ புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளன. அவர்கள் பரலோகத்தினுள் ஏற்றுக் கொள்ளப்படுவர். தம் பாவங்களிலிருந்து விடுவிக்கப்பட்டவர்கள் நிரந்தர உலகினுள் பிரவேசிப்பர்.,
ஒவ்வொரு மனிதனுடைய பாவங்களும் இரண்டு இடங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆகவே,யாராலும் கர்த்தரை ஏமாற்ற முடியாது. தம் இருதயத்தில் பாவஞ் செய்யாதவர்களோ,தம் இருதயத்தில் விபசாரம் செய்யாதவர்களோ ஒருவருமில்லை. நாமெல்லாம் பாவிகள் மேலும் நாமெல்லாம் குறைவுள்ளவர்கள்.,
இயேசுவின் பாவ விடுதலையை தம்மிருதயத்தில் ஏற்றுக்கொள்ளாதவர்கள் தம் பாவங்களினிமித்தம் துன்பப்படுவதைத் தவிர வேறேதும் செய்வதற்கில்லை. அவர்கள் மன உறுதி உள்ளவர்களில்லை. அவர்களுக்கு கர்த்தரென்றால் பயம். அவர்கள் பாவங்களினிமித்தம் கர்த்தருக்கு முன்பும் மற்றவர்கள் முன்பும் பயப்படுகிறார்கள். ஆனால் அவர்கள் நீர் மற்றும் ஆவியின் பாவ விடுதலையின் நற்செய்தியை ஏற்றுக்கொண்ட நொடியில்,அவர்கள் இருதயப் பலகையிலும் செய்கையின் புத்தகத்திலும் எழுதப்பட்ட பாவங்கள் சுத்தமாக அழிக்கப்பட்டுவிடும். அவர்கள் அனைத்துப் பாவங்களிலிருந்தும் விடுதலைப் பெற்றார்கள்.,
பரலோகத்தில் ஜீவ புத்தகம் உள்ளது. நீர் மற்றும் ஆவியின் பாவ விடுதலையை விசுவாசிப்போரின் பெயர்கள் அதில் பதிவு செய்யப்பட்டுள்ளன, அவர்கள் பரலோகத்தினுள் பிரவேசிப்பார்கள். அவர்கள் இவ்வுலகில் பாவம் செய்யாததினால் பரலோகத்தினுள் பிரவேசிக்கவில்லை. ஆனால் நீர் மற்றும் ஆவியின் பாவ விடுதலையை விசுவாசித்து தம் எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுதலைப் பெற்றதாலேயே அவர்கள் பிரவேசிக்கிறார்கள். அது "விசுவாசப் பிரமாணத்தினாலேயே ஆகும்” ( ரோமர் 3:27 ).
உடன் கிறிஸ்தவர்களே,வேதபாரகரும் பரிசேயரும் விபசாரத்தில் பிடிபட்ட அப்பெண்ணைப் போன்றே பாவிகள். ,
, அவர்கள் அதிக பாவம் செய்தவர்கள் எனெனில் அவர்கள் பாவிகளில்லை என்று காட்டிக்கொண்டு தம்மைத் தாமே ஏமாற்றிக் கொண்டிருந்தனர். மதத்தலைவர்கள் அனுமதி பத்திரம் பெற்ற திருடர்கள். அவர்கள் ஆத்துமாக்களைத் திருடும் திருடர்கள்,உயிர்களின் திருடர்கள். தாம் விடுதலைப் பெறாதவர்களாக இருந்தபோதிலும் மற்றவர்களுக்கு நல்லவற்றைக் குறித்து போதிக்கத் துணிச்சலுடையவர்கள்.,
சட்டத்தின்படி ஒருவன் கூட பாவமில்லாதவன் இல்லை. ஆனால் ஒருவன்/ஒருத்தி தன் எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுதலைப் பெறுவதாலும் அவன்/அவள் பெயர் ஜீவப்புத்தகத்தில் எழுதப்படுவதாலும் அவன்/அவள் நீதிமானகிறானேயன்றி, அவன்/அவள் பாவஞ்செய்யாததினால் அல்ல. முக்கியமானது ஒருவனின்/ஒருத்தியின் பெயர் ஜீவப்புத்தகத்தில் உள்ளதா இல்லையா என்பதிலிருக்கிறது. மக்கள் பாவங்களின்றி வாழ முடியாததாகையால்,அவர்கள் பாவ விடுதலைப் பெறவேண்டும்.,
அதனை விசுவாசிக்கிறாயா இல்லையா என்பதைப் பொறுத்து நீ பரலோகத்தில் ஏற்றுக்கொள்ளப்படுவது இருக்கிறது. இயேசுவில் இரட்சிப்பை நீ ஏற்றுக்கொள்வதில் கர்த்தரின் கிருபையைப் பெற்றுக்கொள்வது இருக்கிறது. பிடிபட்ட பெண்ணின் கதி என்னவாயிற்று?தன் கண்களை மூடிக்கொண்டு அவள் நின்றிருந்தாள். ஏனெனில் அவளுக்கு தன் சாவு தயாராக இருப்பது தெரியும். அநேகமாக அவள் பயத்தினாலும்,மனம் திரும்பியும் அழுதுகொண்டிருந்திருப்பாள். மக்கள் தம் சாவை சந்திக்கும்போது தமக்கு நேர்மையானவர்களாய் இருக்கின்றனர்.,
"ஓ, கர்த்தரே,நான் சாவதே சரியானது. தயவுசெய்து என் ஆத்துமாவை உம் கரங்களில் ஏற்று,என் மீது இரங்கும். என் மீது இரங்கும் இயேசுவே.” விடுதலையின் அன்பிற்காக அவள் இயேசுவிடம் கெஞ்சினாள். "கர்த்தரே,நீர் என்னைத் தீர்த்தால்,நான் தீர்க்கப்படுவேன்,நீ பாவமில்லாதவள் என்று நீர் கூறினால்,என் பாவங்களெல்லாம் மன்னிக்கப்படும். அது உம்மிடமிருக்கிறது.” இவற்றையெல்லாம் அநேகமாக அவள் கூறியிருப்பாள். இயேசுவிடம் சகலமும் விடப்பட்டது.,
"நான் தவறு செய்தேன். தயவு செய்து என் விபசாரத்திற்காக என்னை மன்னியும்.” என்று இயேசுவின் முன் அழைத்து வரப்பட்ட பெண் கூறவில்லை. அவள் கூறினாள், “என்னுடைய பாவங்களிலிருந்து என்னை இரட்சியும். என்னுடைய பாவங்களிலிருந்து பாவ விடுதலை அளித்தால்,நான் இரட்சிக்கப்படுவேன். இல்லையெனில்,நான் நரகஞ்செல்லுவேன். உம்முடைய பாவ விடுதலை எனக்குத் தேவை. கர்த்தரின் அன்பு எனக்குத் தேவை. என் மீது இரங்க அவர் எனக்குத் தேவை.” அவள் தன் கண்களை மூடி பாவ அறிக்கைச் செய்தாள்.,
இயேசு அவளிடம் கேட்டார்,"உன்மேல் குற்றஞ்சாட்டினவர்கள் எங்கே?ஒருவனாகிலும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கவில்லையா?”அவள் பதிலளித்தாள், “ இல்லை ஆண்டவரே” என்றாள்.,
இயேசு அவளிடம் கூறினார்,"நானும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறதில்லை."இயேசு அவளைத் தண்டிக்கவில்லை,ஏனெனில் அவர் யோர்தான் நதியில் பெற்ற ஞானஸ்நானத்தின் மூலம் அவளுடைய எல்லாப் பாவங்களையும் ஏற்கெனவே எடுத்து விட்டிருந்தார். ஆகவே அவள் ஏற்கெனவே பாவ விடுதலைப் பெற்றிருந்தாள். இப்போது, அந்த பாவங்களுக்காக,அப்பெண்ணல்ல, இயேசுவே நியாயந்தீர்க்கப் படவேண்டியவர்.,
"நானும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறதில்லை"என்று அவர் கூறினார்,
- இயேசுவால் அவள் தண்டிக்கப்பட்டாளா?
- இல்லை.
இயேசுவின் இரட்சிப்பினால் அப்பெண் ஆசீர்வதிக்கப்பட்டாள். அவளின் எல்லாப் பாவங்களிலிருந்தும் அவள் விடுவிக்கப்பட்டாள். இயேசு நம்மிடம், நம் பாவங்களிலிருந்து நாம் விடுதலைப் பெற்று,நாமெல்லாம் நீதிமான்கள் ஆனோம் என்று கூறுகிறார்.,
வேதாகமத்தில் அவர் அப்படித்தான் கூறுகிறார். யோர்தான் நதியில் தன் ஞானஸ்நானத்தின் மூலம் எடுத்துக்கொண்ட பாவங்களுக்கு கிரயஞ்செலுத்த அவர் சிலுவையில் மரித்தார். அவருடைய ஞானஸ்நானம் மற்றும் சிலுவைத் தீர்ப்பினால் வரும் பாவ விடுதலையை விசுவாசிப்போரை விடுதலை செய்வதாக அவர் தெளிவாக கூறுகிறார். நமக்கு வேண்டியது இயேசுவின் எழுதப்பட்ட வார்த்தைகளும்,அவற்றைப் பற்றிக்கொள்வதுமாகும். அப்பொழுது அவரின் விடுதலையின் ஆசீர்வாதத்தைப் பெறுவோம்.,
"கர்த்தரே,உமக்கு முன்பாக என்னிடம் எந்தத் தகுதியும் இல்லை. என்னிடம் எந்த தாலந்துகளும் இல்லை. உம்மிடம் காட்ட என் பாவங்களைத் தவிர வேறெதுவுமில்லை. ஆனால் இயேசுவே பாவ விடுதலை அளிக்கும் கர்த்தர் என்று நான் விசுவாசிக்கிறேன். அவர் யோர்தான் நதியில் என் எல்லாப் பாவங்களையும் எடுத்துக்கொண்டு அவற்றிற்காக சிலுவையில் கிரயஞ்செலுத்தினார். அவரின் ஞானஸ்நானம் மற்றும் இரத்தம் மூலம் என் எல்லாப் பாவங்களையும் அவர் எடுத்துப் போட்டார். கர்த்தரே,உம்மை நான் விசுவாசிக்கிறேன்.”
இப்படியாகவே இரட்சிக்கப்பட்டீர்கள். இயேசு நம்மை ‘ஆக்கினைக்குள்ளாகத் தீர்ப்பதில்லை’ அவர் நமக்கு கர்த்தரின் பிள்ளையாகும் உரிமையை வழங்கினார்: நீர் மற்றும் ஆவியின் பாவ விடுதலையை நம்புவோரின் எல்லாப் பாவங்களையும் எடுத்துக் கொண்டு அவர்களை நீதிமான்கள் என்று அழைத்தார்.,
அன்பு நண்பர்களே! அப்பெண் விடுவிக்கப்பட்டாள். விபசாரத்தில் பிடிபட்ட அப்பெண் இயேசுவின் முன் பாவ விடுதலையினால் ஆசீர்வதிக்கப்பட்டாள். நாமும் அந்தப்படியே ஆசீர்வாதம் பெறமுடியும். யாரெல்லாம் தம் பாவத்தை உணர்ந்து கர்த்தரிடம் இரக்கத்தை வேண்டுகிறார்களோ,யாரெல்லாம் இயேசுவினுள் நீர் மற்றும் ஆவியின் விடுதலையை விசுவாசிக்கிறார்களோ,அவர்கள் கர்த்தரிடமிருந்து விடுதலையின் ஆசீர்வாதத்தைப் பெறுவார்கள். பாவமுள்ளவர்கள் தம் பாவங்களிலிருந்து விடுதலைப் பெறவேண்டும். பாவஞ்செய்யும் ஒருவன் அதனை அறிந்து கொள்ளவில்லையென்றால், விடுதலையினால் ஆசீர்வதிக்கப் பட முடியாது.,
இயேசு இவ்வுலகின் பாவங்களை சுமந்து தீர்த்தார். (யோவான் 1:29). இவ்வுலகிலுள்ள எப்பாவிகளாலும் இயேசுவை விசுவாசிப்பதன் மூலம் விடுதலையடைய முடியும். இயேசு அப்பெண்ணிடம் கூறினார். "நானும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறதில்லை.” அவளை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறதில்லை என்று இயேசு கூறியதற்கு காரணம்,அவளின் பாவங்கள் ஏற்கெனவே அவரிடம் இருப்பதே,நம்முடையப் பாவங்களை அவர் தம்மீது ஏற்றுக்கொண்டார்,நமக்கு பதிலாக அவர் தீர்க்கப்படவேண்டியவராயிருந்தார்.,
இயேசுவிற்கு முன் நாமும் கூட விடுதலைப் பெறவேண்டும்,
- எது பெரியது,கர்த்தரின் அன்பா அல்லது அவரின் நியாயத்தீர்ப்பா?
- கர்த்தரின் அன்பு.
,தம் கைகளில் கற்களை வைத்துக் கொண்டிருந்த பரிசேயரும்,இந்நாளின் மதத்தலைவர்களும்,சட்டத்தை எழுத்துவரை விவரிக்கிறார்கள். சட்டம் நம்மிடம் விபசாரம் செய்யாதே என்று கூறுவதால்,பாவஞ்செய்யும் ஒருவன் கல்லெறிந்து கொல்லப்படவேண்டும் என்று விசுவாசிக்கிறார்கள். அவர்கள் பெண்களை இச்சையுடன் நோக்கினாலும் விபசாரத்தில் ஈடுபடவில்லை என்பது போல் காட்டிக்கொள்கிறார்கள். அவர்களை விடுவிக்கவோ இரட்சிக்கவோ முடியாது. பரிசேயரும் வேத பாரகருமே இவ்வுலகின் சிறந்தவர்களாவர். இயேசு அழைத்தது அவர்களையல்ல. "நான் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்ப்பதில்லை"என்பதை இம்மக்கள் கேட்டதில்லை.,
விபசாரத்தில் பிடிபட்ட பெண் மட்டுமே இந்த சந்தோஷமான வார்த்தைகளைக் கேட்டாள். அவரின் முன் நேர்மையாக நின்றீர்களானால், அவளைப் போல் நீங்களும் ஆசீர்வதிக்கப்படுவீர்கள். "கர்த்தரே,என் வாழ்வு முழுவதும் விபசாரம் செய்தேன். அதனை அடிக்கடிச் செய்வதால் நான் அதனைச் செய்யாதது போலிருக்கிறது. ஒரு நாளில் பல முறை நான் பாவஞ்செய்கிறேன்."
நாம் சட்டத்தை ஏற்றுக்கொண்டு நாம் பாவிகளென்பதையும், அதற்காக மரிக்கவேண்டும் என்பதையும் அறிந்து,கர்த்தரை நேர்மையாக நோக்கி நாம் எப்படியானவர்கள் என்று ஒப்புக்கொண்டு, “கர்த்தரே,நான் இப்படிப்பட்டவன்,தயவுசெய்து என்னை இரட்சியும்” என்றால் கர்த்தர் நம்மை விடுதலையால் ஆசீர்வதிப்பார்.,
இயேசுவின் அன்பாகிய நீர் மற்றும் ஆவியானது கர்த்தரின் நியாயத் தீர்ப்பை வென்றது. "நானும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறதில்லை"அவர் நம்மை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறதில்லை, அவர் கூறுகிறார். "நீ விடுவிக்கப்பட்டாய்"நம் கர்த்தராகிய இயேசுகிறிஸ்து அன்பின் தேவனாயிருக்கிறார். அவர் நம்மை இவ்வுலகின் எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுவித்தார்.,
,நம் கர்த்தர், நீதியின் கர்த்தராகவும் அன்பின் கர்த்தராகவுமிருக்கிறார். அவரின் நீர் மற்றும் ஆவியாகிய அன்பு அவரின் நியாயத் தீர்ப்பை விடவும் பெரிதானது.,
அவரின் அன்பு அவரின் நீதியை விட பெரிதானது,
- அவர் ஏன் நம்மை விடுதலைச் செய்தார்?
- அவரின் அன்பு அவரின் நீதியை விட பெரிதானதாக இருப்பதால்.
கர்த்தர் தம் நீதியை நிறைவேற்ற நீயாயத்தீர்ப்பை அமல்படுத்தியிருந்தால்,அவர் பாவிகளை நியாயந்தீர்த்து நரகத்திற்கு அனுப்பியிருப்பார். ஆனால் நியாயத்தீர்ப்பிலிருந்து,நம்மை இரட்சிக்கும் இயேசுவின் அன்பு பெரிதானதாக இருப்பதால்,கர்த்தர் தன் ஒரே குமாரனாகிய இயேசுவை அனுப்பினார். இயேசு தன் மீது நம் எல்லாப் பாவங்களையும் ஏற்றுக்கொண்டு,நமக்காக நியாயத்தீர்ப்பினைப் பெற்றார். இப்பொழுது,இயேசுவைத் தம் இரட்சகராக விசுவாசிப்பவர்கள் அவரின் பிள்ளையாகவும் நீதிமானாகவும் ஆவர். அவரின் அன்பு அவரின் நீதியை விட பெரிதானதாக இருப்பதால்,அவர் நம்மை விடுதலைச் செய்தார்.,
அவரின் நீதியின் மூலம் மட்டும் நம்மைத் தீர்க்காததற்கு கர்த்தருக்கு நாம் நன்றி கூறவேண்டும். இயேசு வேத பாரகரிடமும், பரிசேயரிடமும், தம் சீடர்களிடமும் கூறியது போல் கர்த்தருக்கு வேண்டியதெல்லாம் கர்த்தரைக் குறித்தும் அவரின் கிருபையைக் குறித்தும் நாம் அறிந்திருப்பதே - நம் காணிக்கையயைல்ல. சிலர் ஒரு பசுவையோ,அல்லது ஒரு ஆட்டையை தினமும் பலியிட்டு அதனைக் கர்த்தர் முன் படைத்து, “கர்த்தரே என் பாவங்களை தினமும் மன்னியும்” என்று ஜெபிக்கிறார்கள். கர்த்தர் நம்மிடமிருந்து பலிகளை எதிர்பார்க்கவில்லை,மாறாக நீர் மற்றும் ஆவியின் விடுதலையின் மீதுள்ள நம் விசுவாசத்தை எதிர்ப்பார்க்கிறார். நாம் விடுவிக்கப்பட்டு விடுதலையாவதை அவர் விரும்புகிறார். நமக்குத் தன் அன்பைக் கொடுத்து நம் விசுவாசத்தை ஏற்றுக்கொள்ள விரும்புகிறார். உங்களால் இதனைப் பார்க்க முடிகிறதா?இயேசு நமக்கு இரட்சிப்பை அளித்தார்.,
இயேசு பாவங்களை வெறுக்கிறார்,ஆனால் கர்த்தரின் சாயலாகப் படைக்கப்பட்ட மனிதர்கள் மீது அளவு கடந்த அன்புடையவராயிருக்கிறார். காலம் தொடங்குவதற்கு முன்பே நம்மை கர்த்தரின் பிள்ளையாக்க அவர் தீர்மானித்தார். அவரின் ஞானஸ்நானம் மற்றும் இரத்தம் மூலம் நம் பாவங்களையெல்லாம் துடைத்தார். நம்மை விடுவிக்கும்பொருட்டும், இயேசுவைத் தரித்துக் கொள்ளவும்,நம்மை அவரின் பிள்ளைகளாக்கும் படியாகவும்,கர்த்தர் படைத்தார்.,
அவரின் நீதியின் சட்டத்தினால் மட்டும் அவர் நம்மை நியாயந்தீர்த்தால்,பாவிகளாகிய நாம், சாகவேண்டியர்கள். ஆனால் இயேசுவின் ஞானஸ்நானம் மூலம் அவர் நம்மை விடுவித்து சிலுவையில் அவர் மகனைத் தீர்த்தார். நீ விசுவாசிக்கிறாயா? பழைய ஏற்பாட்டில் இதனை நாம் உறுதிப்படுத்துவோம். ,
ஆரோன் போக்காட்டின் மீது தன் கைகளை வைத்தான்,
- இஸ்ரவேலின் பாவங்களை அவர்களின் பிரதிநிதியாக இருந்து போக்காட்டின் மீது சுமத்தியது யார்?
- தலைமை ஆசாரியன்.
உலகின் பாவங்கள் யாவும் பழைய ஏற்பாட்டுக் காலத்தில் பலியிடுவதன் மூலமும், புதிய ஏற்பாட்டில் இயேசுவின் ஞானஸ்நானம் மூலமும் துடைக்கப்பட்டன. பழைய ஏற்பாட்டில்,களங்கமில்லாத ஆட்டின் தலைமீது தலைமை ஆசாரியன் தன் கைகளை வைப்பதன் மூலம்,இஸ்ரவேலரின் ஓராண்டு பாவங்களுக்கும் கிரயஞ் செலுத்தினான்.,
"அதின் தலையின் மேல்,ஆரோன் தன் இரண்டு கைகளையும் வைத்து,அதின்மேல் இஸ்ரவேல் புத்திரருடைய சகல அக்கிரமங்களையும் அவர்களுடைய எல்லாப் பாவங்களினாலும் உண்டான அவர்களுடைய சகல மீறுதல்களையும் அறிக்கையிட்டு,அவைகளை வெள்ளாட்டுக்கடாவினுடைய தலையின் மேல் சுமத்தி,அதை அதற்கான ஆள்வசமாய் வனாந்திரத்துக்கு அனுப்பிவிடக்கடவன்” (லேவியராகமம் 16:21).
பழைய ஏற்பாட்டு நாட்களில் இப்படியாகவே அவர்கள் பாவவிடுதலைப் பெற்றனர். தினப்பாவங்களிலிருந்து விடுதலையாகும்படி,ஒருவன் களங்கமில்லாத ஆட்டுக் குட்டியையோ,அல்லது ஆட்டையோ ஆசரிப்புக் கூடாரத்திற்கு எடுத்து வந்து அதனை பலிபீடத்திற்கு முன் பலியிட்டான். பலிமிருகத்தின் மீது அவன் தன் கைகளை வைக்க, பலியின் மீது அவன் பாவங்கள் மாற்றப்பட்டன. பிறகு அப்பலியானது,கொல்லப்பட்டு அதன் இரத்தம் பலிபீடத்தின் மேலுள்ள கொம்புகளின் மீது ஆசாரியனால் ஊற்றப்பட்டது.,
பலிபீடத்தின் நான்கு மூலைகளிலும் கொம்புகள் இருந்தன. இக்கொம்புகள் வெளி 20:12 இல் கூறப்பட்டுள்ள செய்கையின் புத்தகத்திற்கு ஒப்பாயுள்ளன. மீதியுள்ள இரத்தம் தரையிலும் கூடத் தெளிக்கப்பட்டது. மனிதன் புழுதியிலிருந்து உருவாக்கப் பட்டவனாகையால்,தரையானது மனிதனின் இருதயத்தைக் குறிக்கிறது. இப்படியாக மக்கள் தம் தினப் பாவங்களிலிருந்து விடுவிக்கப்பட்டார்கள். ,
ஆனால் அவர்களால் தினமும் பாவபலியைச் செலுத்த முடியவில்லை. ஆகவே அவர்கள் வருடம் முழுவதும் செய்த பாவங்களுக்கு வருடத்திற்கு ஒரு முறை பாவ விடுதலைப் பெறுவதை அனுமதித்தார். இந்த பாவ விடுதலை தினமானது,எழாம் மாதம் பத்தாம் திகதியாகும். அந்நாளில்,இஸ்ரவேல் மக்களின் பிரதிநிதிகளும்,தலைமை ஆசாரியனும் இரண்டு ஆடுகளை எடுத்து வந்து,அவற்றின் தலை மீது மக்களின் எல்லாப் பாவங்களையும் அதன் மீது செலுத்தும்படி கை வைத்து இஸ்ரவேல் மக்கள் விடுதலைப் பெறும்படி கர்த்தருக்கு முன்பாக அதனைப் பலியிட்டார்கள்.,
"அதின் தலையின் மேல் ஆரோன் தன் இரண்டு கைகளையும் வைத்து,அதின்மேல் இஸ்ரவேல் புத்திரருடைய சகல அக்கிரங்களையும் அவர்களுடைய எல்லாப் பாவங்களினாலும் உண்டான அவர்களுடைய சகல மீறுதல்களையும் அறிக்கையிட்டு,அவைகளை வெள்ளாட்டுக் கடாவினுடைய தலையின் மேல் சுமத்தி."
இஸ்ரவேல் மக்களின் பிரதிநிதியாக தலைமை ஆசாரியனான ஆரோனை கர்த்தர் நியமித்தார். ஒவ்வொருவரும் தம் கைகளை ஆட்டின் தலைமீது தனித்தனியாக வைப்பதற்கு பதிலாக,அனைத்து மக்களின் பிரதிநிதியாகிய,தலைமை ஆசாரியன்,தன் கைகளை உயிருள்ள ஆட்டின் மீது அவ்வருடப் பாவங்களுக்கு கிரயமாக வைத்தான்.,
அவன் கர்த்தரின் முன்பு இஸ்ரவேலரின் பாவங்களைக் கூறினான். "ஓ கர்த்தரே,உம்முடைய பிள்ளைகளாகிய இஸ்ரவேலர்கள் பாவஞ்செய்தனர். நாம் சிலைகளை ஆராதித்தோம்,உம்முடைய கற்பனைகளை உடைத்தோம்,உம் பெயரை வீணில் வழங்கினோம், வேறு சிலைகளைச் செய்வித்து அவற்றை உமக்கும் மேலாக நேசித்தோம். நாம் ஓய்வு நாளை பரிசுத்தமாக ஆசரிக்கவில்லை, பெற்றோருக்கு மரியாதைச் செலுத்தவில்லை கொலை செய்திருக்கிறோம்,விபசாரம் செய்துள்ளோம், திருடியிருக்கிறோம்... நாம் பொறாமையிலும் சண்டைகளிலும் ஈடுபட்டிருக்கிறோம்."
அவன் எல்லாப் பாவங்களையும் பட்டியலிட்டான். "கர்த்தரே,இஸ்ரவேல் மக்களாலோ, என்னாலோ உம் சட்டத்தைக் கடைபிடிக்க முடியவில்லை. அந்த பாவங்களிலிருந்து விடுதலை பெறும் பொருட்டு,இந்த ஆட்டின் மீது என் கைகளை வைத்து அனைத்து பாவங்களையும் அதன் மீது சுமத்துகிறேன்.” எல்லா மனிதர்களுக்காகவும் தலைமை ஆசாரியன் தன் கைகளை பலியின் மீது வைத்து,அதின் தலைமீது எல்லாப் பாவங்களையும் செலுத்தினான். அங்கீகரிக்கப்படுதல்,அல்லது கைகளை வைத்தல் என்பது ‘சுமத்தல்’ என்று பொருள்படும். ( லேவியராகமம் 1:1-4, 16:20-21 )
- பழைய ஏற்பாட்டுக்காலத்தில் பாவவிடுதலை நிறைவேற்றப்பட்டது எப்படி?
- பலி மிருகத்தின் தலைமீது கைகளை வைப்பதன் மூலம்.
கர்த்தர் இஸ்ரவேல் மக்களுக்கு பாவ பலியிடும் சடங்கைக் கொடுத்தமையால் அவர்களால் தம் பாவங்களை அதன் மீது சுமத்தி விடுதலைப் பெறமுடிந்தது. அவர் பாவப்பலிமிருகமானது களங்கமில்லாததாகவும்,ஒருவனுக்கு பதிலாக அப்பாவ பலியானது கொல்லப்படவேண்டுமென்றார்.,
,பாவ விடுதலைத் தினத்தில்,பாவ பலியானது கொல்லப்பட்டு அதன் இரத்தம் பரிசுத்த ஸ்தலத்திற்குள் எடுத்துச் செல்லப்பட்டு கிருபாசனத்தின் மீது ஏழு முறைத் தெளிக்கப்பட்டது. இப்படியாக ஏழாம் மாதம் பத்தாம் நாளில் இஸ்ரவேல் மக்கள் அவ்வருடப்பாவத்திற்கு கிரயஞ்செலுத்தினர்.,
தலைமை ஆசாரியன் தனியாக பலி காணிக்கையைச் செலுத்த பரிசுத்த ஸ்தலத்தினுள் சென்றான்,ஆனால் வெளியே குழுமியிருந்த மக்கள்,கிருபாசனத்தின் மீது இரத்தம் தெளிக்கப்படுகையில் தலமை ஆசாரியனின் ஏபோது என்ற உடையிலிருந்த பொன்னாலான மணிகள் ஒலிப்பதைக் கேட்டனர். பிறகு தம் எல்லாப் பாவங்களுக்கும் கிரயஞ்செலுத்தப்பட்டது என்று மக்கள் மகிழ்ந்தனர். தங்க மணிகளின் ஒலியானது சந்தோஷமான நற்செய்தியின் ஒலியாகும்.,
இயேசு குறிப்பிட்ட மக்களை மட்டுமே நேசித்து அவர்களை விடுவிக்கிறார் என்பது உண்மையல்ல. இயேசு உலகின் எல்லாப் பாவங்களையும் தன் ஞானஸ்நானத்தின் மூலம் ஒரேதரமாக ஏற்றுக்கொண்டார். அவர் நம்மை ஒரே தரமாக விடுவிக்க விரும்புகிறார். நம்முடையப் பாவங்களிலிருந்து தினமும் விடுதலைப் பெற முடியாது; அவையெல்லாம் ஒரேதரம் விடுதலையாயிற்று.,
பழைய ஏற்பாட்டில், பாவ மன்னிப்பானது கைவைப்பதன் மூலமும் பலி காணிக்கை மூலமாகவும் வழங்கப்பட்டது. ஆரோன் மக்களுக்கு முன் தன் கைகளை உயிருள்ள ஆட்டின் தலை மீது வைத்து அவ்வருடம் முழுவதும் மக்கள் செய்த பாவங்களைப் பட்டியலிட்டான். எல்லோர் முன்பும் ஆட்டின் மீது பாவங்களைச் சுமத்தினான். அப்படியானால் மக்களின் பாவங்கள் எங்கே?அவையெல்லாம் ஆட்டின் மீது சுமத்தப்பட்டது.,
பிறகு ‘பொருத்தமான மனிதனால்'ஆடானது வழி நடத்தப்பட்டது. இஸ்ரவேலின் அனைத்துப் பாவங்களுடனும் அந்த ஆடானது,நீரோ,புல்லோ இல்லாத வனாந்திரத்திற்குள் வழி நடத்தப்பட்டது. அந்த ஆடு,வனாந்தரத்தில், எரியும் சூரியனுக்கு கீழ் அலைந்து இறுதியில் மரித்து போகும். அந்த ஆடு இஸ்ரவேலின் பாவங்களுக்காக மரித்தது.,
இதுவே விடுதலையின் அன்பாகிய,கர்த்தரின் அன்பாகும். அந்நாட்களில் இப்படியாகத்தான் வருடப் பாவங்களிலிருந்து அவர்கள் விடுதலைப் பெற்றார்கள். ஆனால் நாம் புதிய ஏற்பாட்டின் காலத்தில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம். இயேசு நம்முலகிற்கு இறங்கி வந்து 2000 ஆண்டுகளாகிவிட்டது. பழைய ஏற்பாட்டில் அவர் உரைத்த தீர்க்க தரிசனங்களை நிறைவேற்ற அவர் வந்தார். அவர் வந்து நம் பாவங்களுக்கு விடுதலைத் தந்தார்.,
நம்மை விடுவிக்கவே,
- இயேசு என்பதன் பொருள் என்ன?
- அவரின் மக்களைப் பாவங்களிலிருந்து இரட்சிப்பவர்.
மத்தேயு 1 ஐ வாசிப்போமாக. "அவன் இப்படிச் சிந்தித்து கொண்டிருக்கையில்,கர்த்தருடைய தூதன் சொப்பணத்தில் அவனுக்குக் காணப்பட்டு: தாவீதின் குமாரனாகிய யோசேப்பே,உன் மனைவியாகிய மரியாளைச் சேர்த்துக் கொள்ள ஐயப்படாதே; அவளிடத்தில் உற்பத்தியாயிருக்கிறது பரிசுத்த ஆவியினால் உண்டானது. அவள் ஒரு குமாரனைப் பெறுவாள்,அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக;ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான்."
இவ்வுலகின் பாவங்களை கழுவிப்போடும் விதமாக தம் குமாரனை இவ்வுலகிற்கு அனுப்ப பரலோகத்திலிருக்கும் கர்த்தர் கன்னிமரியாளின் சரீரத்தை உபயோகித்தார். அவர் மரியாளிடம் ஒரு தூதனை அனுப்பி, “இதோ,நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய்,அவருக்கு இயேசு என்று பெயரிடுவாயாக.” அதன் பொருள் மரியாளின் மகன் இரட்சகராவார் என்பதாகும். இயேசுகிறிஸ்து என்பதன் பொருள் தம் மக்களை இரட்சிப்பவர் என்பதாகும் வேறு வார்த்தைகளில் கூறுவதானால்,அவரே இரட்சகர்.,
உலகின் எல்லாப் பாவங்களையும் இயேசு தம்மீது ஏற்றுக்கொண்ட முறை அவர் யோர்தான் நதியில் பெற்ற ஞானஸ்நானத்தின் மூலமாகும். அவர் யோவான் ஸ்நானனால் ஞானஸ்நானம் பண்ணப்பட்டதன் மூலம் உலகின் எல்லாப் பாவங்களும் அவர் மீது சுமத்தப்பட்டது. மத்தேயு 3:13-17 ஐ நாம் வாசிப்போமாக.,
"அப்பொழுது யோவானால் ஞானஸ்நானம் பெறுவதற்கு இயேசு கலிலேயாவை விட்டு யோர்தானுக்கு அருகே அவனிடத்தில் வந்தார். யோவான் அவருக்குத் தடைச் செய்து: நான் உம்மாலே ஞானஸ்நானம் பெறவேண்டியதாயிருக்க,நீர் என்னிடத்தில் வரலாமா என்றான். இயேசு அவனுக்கு பிரதியுத்தரமாக: இப்பொழுது இடங்கொடு,இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது என்றார். அப்பொழுது அவருக்கு இடங்கொடுத்தான். இயேசு ஞானஸ்நானம் பெற்று,ஜலத்திலிருந்து கரையேறினவுடனே,இதோ,வானம் அவருக்கு திறக்கப்பட்டது; தேவ ஆவி புறாவைப் போல இறங்கி,தம்மேல் வருகிறதைக் கண்டார். அன்றியும்,வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி: இவர் என்னுடைய நேசகுமாரன்,இவரில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது."
நம்முடைய அனைத்துப் பாவங்களிலிருந்தும் நம்மை விடுவிப்பதற்காக இயேசு யோவான் ஸ்நானனிடம் சென்றார். "யோவான்,என்னை இப்போது ஞானஸ்நானம் செய். இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது. நான் உலகின் எல்லாப் பாவங்களையும் ஏற்றுக் கொண்டு பாவிகளையெல்லாம் அவர்களின் பாவங்களிலிருந்து விடுவிக்க வேண்டியிருப்பதால்,ஞானஸ்நானத்தின் மூலம் அவர்கள் பாவங்களை ஏற்க வேண்டியவனாக இருக்கிறேன். என்னை இப்போது ஞானஸ்நானம் செய்! அனுமதி !,
இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது ஏற்றதாயிருக்கிறது. இயேசு யோவான் ஸ்நானனால் ஞானஸ்நானம் பெற்றார். சரியாக அந்நொடிப் பொழுதில், நம்மை எல்லாப் பாவங்களையும் விடுவிக்கும் கர்த்தரின் எல்லா நீதியும் நிறைவேற்றப்பட்டது.,
இப்படியாகவே அவர் நம் பாவங்களையெல்லாம் எடுத்துப் போட்டார். உன்னுடையப் பாவங்களும் கூட இயேசுவின் மீது சுமத்தப்பட்டுவிட்டது. இதனைப் புரிந்து கொள்கிறாயா?
இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் ஆவியின் மூலம் வரும் பாவ விடுதலையை விசுவாசித்து இரட்சிக்கப்படு.,
- எல்லா நீதிகளும் எப்படி நிறைவேற்றப்பட்டது?
- இயேசுவின் ஞானஸ்நானத்தின் மூலம்.
கைவைப்பதன் மூலமும் பாவ காணிக்கையின் பலியின் மூலமும் உலகின் அனைத்துப் பாவங்களும் கழுவப்படும் என்று கர்த்தர் இஸ்ரவேலருக்கு முதலில் உறுதியளித்தார். ஆயினும், ஒவ்வொருவரும் ஆட்டின் தலைமீது கைவைப்பது சாத்தியமில்லையாகையால்,கர்த்தர் ஆரோனைத் தலைமை ஆசாரியனாக்குவதன் மூலம் அவனால் எல்லா மக்களுக்குமாக பலி செலுத்த முடிந்தது. ஆகவே அவனால் அவர்களின் வருடப் பாவங்களை பாவ பலியின் தலைமீது ஒரேயடியாக சுமத்த முடிந்தது. இது அவரின் ஞானமும் விடுவிக்கும் வல்லமையுமாயிருந்தது. கர்த்தர் ஞானவானும் ஆச்சரியமும் மிக்கவர்.,
,நம் உலகை இரட்சிக்கும்படியாக அவர் தம் குமாரனாகிய இயேசுவை அனுப்பினார். ஆகவே பாவ பலி தயாராகிவிட்டது, உலகின் எல்லாப் பாவங்களையும் இயேசுவின் தலை மீது சுமத்த கைவைக்கும்படியாக, ‘மனிதர்களின் பிரதிநிதி'ஒருவன் இப்போது தேவைப்பட்டான். அப்பிரதிநிதி யோவான் ஸ்நானன் ஆவான். மத்தேயு 11:11 இல் மனிதர்களின் பிரதிநிதியை இயேசுவிற்கு முன்னதாக உலகிற்கு அனுப்பினார்.,
மனிதர்களின் கடைசித் தலைமை ஆசாரியன்,யோவான் ஸ்நானனாவான். மத்தேயு 11:1 இல் "ஸ்திரீகளிடத்திலே பிறந்தவர்களில் யோவான் ஸ்நானனைப் பார்க்கிலும் பெரியவன் ஒருவன் எழும்பினதில்லை” என்று எழுதப்பட்டுள்ளது. அவனே மனிதர்களின் ஒரே பிரதிநிதி. படைக்கப் பட்டவைகளுக்கெல்லாம் யோவானை அவர் அனுப்பியதால்,அவன் இயேசுவிற்கு ஞானஸ்நானம் செய்விப்பதன் மூலம் உலகின் பாவங்களையெல்லாம் அவர் மீது சுமத்த முடிந்தது.,
பூமியின் ஆறு பில்லியன் மக்களும் இப்போது இயேசுவின் முன் சென்று அவர்களின் பாவங்களைச் சுமத்த இயேசுவின் தலைமீது கைவத்தார்களேயானால் அவர் தலை என்னவாகும்?உலகின் ஆறு பில்லியன் மக்களும் இயேசுவின் தலைமீது கை வைக்க வேண்டுமென்பது அத்தனை அழகிய காட்சியாக இருக்காது. ஆர்வமுள்ள சிலர் அவர் தலையை அழுத்துவதன் மூலம் அவர் தலைமுடி உதிர்ந்து போகும். கர்த்தர் தம்முடைய ஞானத்தினாலே, யோவானை நம் பிரதிநிதியாக நியமித்து உலகின் எல்லாப் பாவங்களையும் இயேசுவின் மீது ஒரேதரம் சுமத்தினார்.,
மத்தேயு 3:13-17 இல் "அப்பொழுது யோவானால் ஞானஸ்நானம் பெறுவதற்கு இயேசு கலிலேயாவை விட்டு யோர்தானுக்கு அருகே அவனிடத்தில் வந்தார்."என்று எழுதப்பட்டுள்ளது. இயேசு 30 வயதுடையவராகும்போது இது நடந்தது. இயேசு தம் பிறப்பிற்கு 8 நாட்களுக்கு பிறகு விருத்தசேதனம் பண்ணப்பட்டார். அதன் பிறகு அவர் 30 வயதாகும் வரை நடந்த சில சம்பவங்களே பதிவு செய்யப்பட்டுள்ளன.,
இயேசு தம் 30 ஆம் வயது வரைக் காத்திருக்க வேண்டியதன் காரணம் பழைய ஏற்பாடு கூறும் பரலோக தலைமை ஆசாரியராவதை நிறைவேற்றவே. உபாகமத்தில், தலைமை ஆசாரியத்துவத்தை கடைபிடிக்கும் தலைமை ஆசாரியன் குறைந்தது 30 வயதுடையவனாக இருக்க வேண்டுமென கர்த்தர் மோசேயிடம் கூறினார். இயேசுவே பரலோகத்தின் தலைமை ஆசாரியர். நீ இதனை விசுவாசிக்கிறாயா?
புதிய ஏற்பாட்டில் மத்தேயு 3:13-14 இல் "அப்போழுது யோவானால் ஞானஸ்நானம் பெறுவதற்கு இயேசு கலிலேயாவை விட்டு யோர்தானுக்கு அருகே அவனிடத்தில் வந்தார். யோவான் அவருக்குத் தடை செய்து: நான் உம்மாலே ஞானஸ்நானம் பெறவேண்டியதாயிருக்க,நீர் என்னிடத்தில் வரலாமா என்றான்” மனிதர்களின் பிரதிநிதி யார்? யோவான் ஸ்நானன். அப்படியானால் பரலோகத்தின் பிரதிநிதி யார்? இப்பிரதிநிதிகள் சந்தித்தனர். அவர்களில் உயர்ந்தவர் யார்? பரலோகத்தின் பிரநிதிதானே.,
"விரியன் பாம்புக் குட்டிகளே! மனந்திரும்புங்கள்” என்று மிகத்துணிச்சலாக அந்நாட்களின் மதத் தலைவர்களை நோக்கி கூக்குரலிட்ட யோவான் ஸ்நானன் இயேசுவின் முன்பு தாழ்மையானவனாகினான். "நான் உம்மாலே ஞானஸ்நானம் பெறவேண்டியதாயிருக்க,நீர் என்னிடத்தில் வரலாமா?”என்று கூறினான்.,
இந்நொடியில் இயேசு கூறினார்,"இப்பொழுது இடங்கொடு,இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது.",இயேசு இவ்வுலகிற்கு கர்த்தரின் நீதியை நிறைவேற்ற வந்தார்,அது அவர் யோவான் ஸ்நானனால் ஞானஸ்நானம் பெற்றபோது நிறைவேறிற்று.,
"அப்பொழுது அவருக்கு இடங்கொடுத்தான். இயேசு ஞானஸ்நானம் பெற்று,ஜலத்திலிருந்து கரையேறினவுடனே,இதோ,வானம் அவருக்குத் திறக்கப்பட்டது;தேவ ஆவி புறாவைப்போல் இறங்கி,தன்மேல் வருகிறதைக் கண்டார். அன்றியும்,வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி: இவர் என்னுடைய நேசகுமாரன்,இவரில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது."
இயேசு ஞானஸ்நானம் பெற்றபோது நடந்தது இதுவே. அவர் யோவான் ஸ்நானனால் ஞானஸ்நானம் பெற்று உலகின் எல்லாப் பாவங்களையும் தம்மீது ஏற்றுக்கொண்டவுடன் பரலோகத்தின் வாசல் திறக்கப்பட்டது.,
"யோவான் ஸ்நானன் காலமுதல் இதுவரைக்கும் பரலோக ராஜ்யம் பலவந்தம் பண்ணப்படுகிறது; பலவந்தம் பண்ணுகிறவர்கள் அதைப் பிடித்துக் கொள்கிறார்கள்” (மத்தேயு 11:12).
யோவான் ஸ்நானன் காலம்வரை எல்லா தீர்க்கதரிசிகளும் கர்த்தரின் சட்டமும் தீர்க்கதரிசனம் உரைத்தன. "யோவான் ஸ்நானன் காலமுதல் இதுவரைக்கும் பரலோக ராஜ்யம் பலவந்தம் பண்ணப்படுகிறது;பலவந்தம் பண்ணுகிறவர்கள் அதைப் பிடித்துக் கொள்கிறார்கள்",அவரின் ஞானஸ்நானத்தை விசுவாசிக்கும் அனைவராலும் பரலோக ராஜ்யத்தினுள் செல்லமுடியும்.,
"நானும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறதில்லை"
- இயேசு ஏன் சிலுவையில் தீர்க்கப்பட்டார்?
- அவர் எல்லாப் பாவங்களையும் தன்மீது ஏற்றுக்கொண்டதால்.
இயேசு யோவான் ஸ்நானனால் ஞானஸ்நானம் பண்ணப்பட்டு உலகின் எல்லாப் பாவங்களையும் தம்மீது ஏற்றார். அதன் பிறகே அவர் அப்பெண்ணிடம் "நானும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறதில்லை"என்றார். அவர் அப்பெண்ணை ஆக்கினைக்குள்ளாக தீர்க்காததற்கான காரணம் யோர்தானில் அவர் உலகின் எல்லாப் பாவங்களையும் ஏற்றுக்கொண்டதே. ஆகவே,அப்பெண்ணல்ல, இயேசுவே அப்பாவங்களுக்காக நியாயந்தீர்க்கப்படவேண்டியவர்.,
,இயேசு இவ்வுலகின் பாவங்களையெல்லம் சுமந்து தீர்த்தார். ‘பாவத்தின் சம்பளம் மரணம்'என்பதால் அவர் சிலுவையில் படப்போகும் பாடுகளை எண்ணி பயந்ததை நாம் பார்க்கலாம். இத்தீர்ப்பினைத் தன்னிடமிருந்து எடுத்துப்போடும்படி ஒலிவ மலையில் மூன்று முறை கர்த்தரிடம் ஜெபித்தார். இயேசு மனித சரீரத்தினாலே ஆனவரால் அவர் வலியை குறித்து பயந்தார் என்பது புரிந்துகொள்ளக்கூடியது. நியாயத் தீர்ப்பை நிறைவேற்ற இயேசு இரத்தஞ் சிந்த வேண்டியிருந்தது.,
பழைய ஏற்பாட்டின் பாவ பலியானது எப்படி தன் இரத்தத்தை பாவக்கிரயமாக சிந்த வேண்டியிருந்ததோ,அது போலவே அவர் சிலுவையில் பலியிடப்பட வேண்டியவராயிருந்தார். உலகின் பாவங்களையெல்லாம் அவர் ஏற்கெனவே தன் மீது ஏற்றுக்கொண்டார். இப்பொழுது அதற்கு அவர் தம் உயிரை நம்மை விடுவிக்கும்படி கொடுக்க வேண்டியிருந்தது. கர்த்தருக்கு முன் தான் தீர்க்கப்பட வேண்டியதைக் குறித்து அவருக்குத் தெரியும்.,
இயேசுவின் இருதயத்தில் எந்த பாவங்களுமிருக்கவில்லை. ஆனால் அவரின் ஞானஸ்நானம் மூலம் எல்லாப் பாவங்களும் அவர் மீது சுமத்தப்பட்டதால்,இப்பொழுது கர்த்தர் தம் சொந்த குமாரனையே தீர்க்கவேண்டியிருந்தது. இப்படியாக முதலில் கர்த்தரின் நீதி நிறைவேற்றப்பட்டது,இரண்டாவதாக நம் இரட்சிப்பிற்காக அவரின் அன்பை நம்மீது பொழிந்தார். ஆகவே,சிலுவையில் இயேசு தீர்க்கப்படவேண்டியிருந்தது. ,
"நானும் உன்னை ஆக்கினைக்குட்படுத்துவதில்லை,நானும் உன்னை நியாயந் தீர்ப்பதில்லை."வேண்டுமென்றோ இயல்பாகவோ,தெரிந்தோ, தெரியாமலோ நாம் செய்த எல்லாப் பாவங்களும் கர்த்தரால் தீர்க்கப்படவேண்டியவை.,
கர்த்தர் நம்மைத் தீர்க்கவில்லை,ஆனால் ஞானஸ்நானம் மூலம் நம் பாவங்களையெல்லாம் ஏற்றுக்கொண்ட இயேசுவை நியாயந்தீர்த்தார். அவர் பாவிகள் மீது அன்பும் நேசமும் உள்ளவராதலால் அவர்களை நியாயந்தீர்க்க விரும்பவில்லை. ஞானஸ்நானமும் அவரின் சிலுவை இரத்தமும் நமக்கான அவரின் விடுதலையின் அன்பாகும். "தேவன்,தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு,அவரைத் தந்தருளி,இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்” (யோவான் 3:16).
இப்படியாகவே அவரின் அன்பை அறிகிறோம். விபசாரத்தில் ஈடுபட்ட பெண்ணை இயேசு தண்டிக்கவில்லை.,
அவள் விபசாரத்தில் பிடிபட்டதால் தானொரு பாவி என்று அவளுக்குத் தெரியும். அவள் தன்னிருதயத்தில் மட்டும் பாவத்துடனிருக்கவில்லை,அதனை அவள் சரீரத்திலும் சுமந்தாள். தன்னுடைய பாவத்தை மறுக்க அவளிடம் எந்த வழியும் இல்லை. ஆயினும், இயேசு அவளின் எல்லாப் பாவங்களையும் எடுத்துக் கொண்டார் என்று அவள் விசுவாசித்ததால்,அவள் இரட்சிக்கப்பட்டாள். இயேசு அளிக்கும் விடுதலையை நாம் விசுவாசித்தால்,நாம் இரட்சிக்கப்படுவோம். அதனை விசுவாசி! அது நம் நன்மைக்கானதாகும்.,
- அதிகமாக ஆசீர்வதிக்கப் பட்டது யார்?
- எந்தப் பாவமுமில்லாத மனிதன்.
எல்லா மனிதர்களும் பாவஞ்செய்கிறார்கள். எல்லா மக்களும் விபசாரம் செய்கிறார்கள். ஆனால் எல்லா மக்களும் தம் பாவங்களுக்காக தீர்க்கப்படுவதில்லை. நாமெல்லாம் பாவஞ் செய்தவர்களே, ஆனால் இயேசுகிறிஸ்துவின் பாவ விடுதலையை விசுவாசிப்பவர்கள் தம் இருதயத்தில் பாவமில்லாதவர்கள். இயேசுவின் இரட்சிப்பை விசுவாசிப்பவர்களே சந்தோஷமான மக்கள். தம் எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுதலைப் பெற்றவர்களும், இயேசுவினுள் நீதியாயிருப்பவர்களும் அதிகம் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.,
ரோமர் 4:7 இல் சந்தோஷத்தைக் குறித்து கர்த்தர் நம்மிடம் கூறுகிறார்,"எவர்களுடைய அக்கிரமங்கள் மன்னிக்கப்பட்டதோ,எவர்களுடைய பாவங்கள் மூடப்பட்டதோ,அவர்கள் பாகியவான்கள்.” கர்த்தர் முன்பு நாம் மரியாதைப் பெற தகுதியில்லாதவர்களும்,குறைவானவர்களாகவும் இருக்கிறோம். அவரின் சட்டத்தைக் குறித்து அறிந்திருந்தும் நாம் தொடர்ந்து பாவஞ் செய்து கொண்டேயிருக்கிறோம். நாம் அத்தனை பலவீனமுள்ளவர்கள்.,
ஆனால் கர்த்தர் நம்மை ஞானஸ்நானத்தினாலும் அவரின் ஒரேகுமாரனுடைய இரத்தத்தினாலும் விடுவித்ததுடன், நமக்கு,உனக்கும் எனக்கும்,நாம் இப்போது பாவிகளில்லை,அவர் முன் நாம் நீதிமான்கள் என்றும் கூறுகிறார். நாம் அவரின் பிள்ளைகளென்று அவர் நம்மிடம் கூறுகிறார்.,
நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியே நற்செய்தியாகிய பாவ விடுதலையாகும். இதனை விசுவாசிக்கிறாயா? அதனை விசுவாசிப்போரை,நீதிமான்களென்றும், விடுவிக்கப் பட்டவர்களென்றும்,அவரின் பிள்ளைகளென்றும் அவர் அழைக்கிறார். உலகின் சந்தோஷமான மனிதன் யார்?விசுவாசிப்பதால் விடுதலையானவனே அவன். நீ விடுவிக்கப் பட்டாயா?
இயேசு உன்னுடையப் பாவங்களை மட்டும் ஏற்றுக் கொள்ளவில்லையா?அவருடைய ஞானஸ்நானத்துடன் உன் எல்லாப் பாவங்களையும் ஏற்றுக்கொண்டார். அதனை விசுவாசி. விசுவாசித்து உன் எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுவிக்கப் படுவாயாக. யோவான் 1:29 ஐ வாசிப்போம்.,
துடைப்பத்தால் பெருக்கியதைப் போன்றே.,
- எவ்வளவு பாவங்களை இயேசு சுமந்தார்?
- உலகின் எல்லாப் பாவங்களையும்.
"மறுநாளிலே யோவான் இயேசுவைத் தன்னிடத்தில் வரக்கண்டு: இதோ,உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி.” (யோவான் 1:29)
"இதோ,உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி."
யோர்தானில் யோவான் ஸ்நானன் உலகின் எல்லாப் பாவங்களையும் இயேசுவின் மீது சுமத்தினான். மறுநாள், உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டியானவர் இயேசுவே என்று சாட்சி பகன்றான். இவ்வுலகின் எல்லாப் பாவங்களையும் அவர் தன் தோளின் மீது சுமந்தார்.,
உலகின் எல்லாப் பாவங்களையும் என்பதன் பொருள் உலகம் உருவான நாள் முதல் அது முடியும் வரை மனிதர்கள் செய்த அனைத்துப் பாவங்களும் என்பதாகும். 2000 வருடங்களுக்கு முன்,உலகின் பாவங்களையெல்லாம் தம்மீது ஏற்றுக்கொண்டு இயேசு நம்மை விடுவித்தார். தேவாட்டுக் குட்டியாகிய அவர்,நம் எல்லா பாவங்களையும் தம்மீது ஏற்றுக்கொண்டு நமக்காக நியாயந்தீர்க்கப்பட்டார்.,
மனிதர்களாகிய நாம் செய்யும் பாவங்கள் இயேசுவின் மீது சுமத்தப்பட்டது. அவர் உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவாட்டுக்குட்டியானார்.,
இயேசு இவ்வுலகிற்கு தாழ்மையான மனிதனாகவும்,உலகின் பாவிகளை இரட்சிக்கவும் வந்தார். நாம் பலவீணர்களாகவும்,கபடர்களாகவும், அறிவில்லாதவர்களாகவும்,முக்கியம் இல்லாதவர்களாகவும்,குறைவு உள்ளவர்களாகவும் இருப்பதால் பாவஞ்செய்கிறோம். இப்பாவங்களெல்லாம் பெருக்கப்பட்டு யோர்தானில் அவர் பெற்ற ஞானஸ்நானம் மூலம் இயேசுவின் தலையில் அது சுமத்தப்பட்டது. சிலுவையில் அவர் சரீர சம்பந்தமாக மரித்ததினால் அவற்றையெல்லாம் முடிவிற்கு கொண்டு வந்தார். அவர் அடக்கம் பண்ணப்பட்டாலும் 3 நாட்களுக்குப் பிறகு உயிரோடெழுந்தார்.,
பாவிகளின் இரட்சகராகவும்,வெற்றி வேந்தனாகவும்,நியாயாதிபதியாகவும், கர்த்தரின் வலது பாரிசத்தில் அவர் இப்போது அமர்ந்திருக்கிறார். அவர் மீண்டும் மீண்டும் நம்மை விடுவிக்க வேண்டியதில்லை, நாம் இரட்சிப்படைய செய்யவேண்டியதெல்லாம் அதனை விசுவாசிப்பதே. அதனை விசுவாசிப்பவர்களுக்கு நித்திய வாழ்வு காத்திருக்கிறது, விசுவாசிக்காதவர்களுக்கு அழிவு காத்திருக்கிறது. தேர்ந்தெடுக்க வேறெதுவுமில்லை.,
இயேசு உங்களனைவரையும் விடுவித்தார். இவ்வுலகில் நீங்களே சந்தோஷமான மக்கள். உங்களுடைய பலவீனத்தினால் நீங்கள் வருங்காலத்தில் செய்யப்போகும் பாவங்கள் அனைத்தையும் கூட அவர் எடுத்துப்போட்டார். ,
உன்னிருதயத்தில் பாவங்களெதுவும் மிச்சமிருக்கிறதா? -இல்லை - ,
இயேசு அவற்றை எடுத்துப்போட்டாரா? -ஆம்,அவர் எடுத்துப்போட்டார் -,
எல்லா மக்களும் ஒரே மாதிரியானவர்களே,ஒருவனும் தன் அயலானைவிட பரிசுத்தனில்லை. ஆனால் அதிகமான மக்கள் கபடர்கள்,அவர்கள் தாம் பாவிகளில்லையென்று நினைக்கிறார்கள். ஆனால் அவர்களும் பாவிகளே. இவ்வுலகமானது பாவங்களை உருவாக்கும் பசுமை இல்லமாகும்.,
பெண்கள் தம் வீட்டைவிட்டு வெளியேறும் போது,சிகப்பு லிப்ஸ்டிக்கை பூசி, முகத்திற்கு பவுடர் போட்டு,தம் முடியை சுருள்படுத்தி,அழகிய ஆடையணிந்து, ஹீல் வைத்த காலணி அணிந்து.... ஆண்களும் அப்படியே பார்பரிடம் சென்று முடிவெட்டி, தம்மைச் சுத்தப்படுத்தி,சுத்தமான ஆடையணிந்து, நவீனமான டை கட்டி, தம் காலணிகளை பிரகாசிக்கச் செய்கிறார்கள்.,
அவர்கள் வெளியரங்கமாக அரசகுமாரனையும்,அரச குமாரியைப் போல் தெரிந்தாலும்,உள்ளே குப்பையின் குவியலாகவே காணப்படுகிறார்கள்.,
பணம் மனிதனை சந்தோஷமுள்ளவனாக்குகிறதா?ஆரோக்கியம் மனிதனை சந்தோஷமுள்ளவனாக்குகிறதா?இல்லை. விடுதலை மட்டுமே மனிதனை உண்மையிலேயே சந்தோஷமுள்ளவனாக்குகிறது. ஒரு மனிதன் வெளியில் எத்தனை சந்தோஷமுள்ளவனாகத் தெரிந்தாலும்,அவன் இருதயத்தில் பாவமிருந்தால் அவன் துன்பத்தில் ஆழ்ந்தவனே. நியாயத் தீர்ப்பைக் குறித்த பயத்திலேயே அவன் வாழ்கிறான்.,
விடுவிக்கப்பட்ட ஒருவன் கந்தையிலிருந்தாலும் சிங்கத்தைப் போல் துணிச்சலுள்ளவனாக இருக்கிறான். அவன் இருதயத்தில் பாவங்களில்லை. "நன்றி கர்த்தாவே, என்னைப் போன்ற பாவிகளை நீர் இரட்சித்தீர்,என்னுடைய எல்லாப் பாவங்களையும் துடைத்தீர். என்னிடம் பெரிதாக எதுவுமில்லை என்று அறிந்திருக்கிறேன். ஆயினும் நீர் என்னை இரட்சித்தமைக்கு உம்மைத் துதிக்கிறேன். நான் நிரந்தரமாக என் பாவங்களிலிருந்து விடுவிக்கப்பட்டேன். கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக!"
விடுவிக்கப்பட்ட ஒருவன் உண்மையிலேயே சந்தோஷமுடையவன். அவரின் விடுதலையின் கிருபையினால் இரட்சிக்கப்பட்ட ஒருவன் உண்மையாகவே சந்தோஷமுடையவன். ,
"உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி” என்றபடி இயேசு நம் பாவங்களையெல்லாம் எடுத்துப்போட்ட படியால் நாம் பாவமற்றவர்கள். அவர் சிலுவையில் நமது இரட்சிப்பை "நிறைவேற்றினார்.” “உலகத்தின் பாவம்” என்பதில் நம்முடைய,உங்களதும் எனதும், பாவங்களும் உள்ளதால் நாம் இரட்சிக்கப்பட்டோம்.,
கர்த்தரின் சித்தப்படியே,
- இயேசுகிறிஸ்துவினுள் நம் இருதயத்தில் பாவமிருக்கிறதா?
- இல்லை. நம்மிடமில்லை.
அன்பு நண்பர்களே,விபசாரத்தில் பிடிபட்ட பெண் இயேசுவின் வார்த்தைகளை விசுவாசித்தமையால்,அவள் இரட்சிக்கப்பட்டாள். அவள் பாவ விடுதலையினால் ஆசீர்வதிக்கப் பட்டதால் வேதாகமத்தில் அவள் கதை பதியப்பட்டுள்ளது. ஆனால் கபட்டு வேதபாரகரும் பரிசேயரும் இயேசுவைவிட்டு ஓடினார்கள்.,
,இயேசுவை நீ விசுவாசித்தால் அங்கே பரலோகம்,ஆனால் இயேசு நீ விட்டுவிட்டால் நரகம். அவருடைய செய்கைகளை நீ விசுவாசித்தால் அங்கே பரலோகம்,அவருடைய செய்கைகளை நீ விசுவாசிக்காவிட்டால் நரகம். பாவ விடுதலை ஒருவனின் முயற்சிகளைப் பொருத்ததல்ல,அது இயேசுவின் இரட்சிப்பினால் ஆனது.,
எபிரேயர் 10ஐ வாசிப்போம். "இப்படியிருக்க நியாயப்பிரமாணமானது வரப்போகிற நன்மைகளின் பொருளாயிராமல்,அவைகளின் நிழலாய் மாத்திரம் இருக்கிறபடியால்,வருஷந்தோறும் இடைவிடாமல் செலுத்தப்பட்டு வருகிற ஒரேவிதமான பலிகளினாலே அவைகளைச் செலுத்த வருகிறவர்களை ஒருக்காலும் பூரணப்படுத்தமாட்டாது. பூரணப்படுத்துமானால்,ஆராதனை செய்கிறவர்கள் ஒரு தரம் சுத்தமாக்கப்பட்டபின்பு,இன்னும் பாவங்களுண்டென்று உணர்த்தும் மனச்சாட்சி அவர்களுக்கு இல்லாதிருப்பதினால்,அந்த பலிகளைச் செலுத்துகிறது நிறுத்தப்படுமல்லவா? அப்படி நிறுத்தப்படாதபடியால் பாவங்கள் உண்டென்று அவைகளினாலே வருஷந்தோறும் நினைவு கூறுதல் உண்டாயிருக்கிறது. அல்லாமலும்,காளை வெள்ளாட்டுக்கடா இவைகளுடைய இரத்தம் பாவங்களை நிவிர்த்தி செய்யமாட்டாதே. ஆகையால் அவர் உலகத்தில் பிரவேசிக்கும்போது: பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பவில்லை,ஒரு சரீரத்தை எனக்கு ஆயத்தம் பண்ணினீர்;சர்வாங்க தகன பலிகளும்,பாவ நிவாரண பலிகளும் உமக்குப் பிரியமானதல்ல என்றீர். அப்போழுது நான்: தேவனே,உம்முடைய சித்தத்தின்படி செய்ய,இதோ வருகிறேன்,புஸ்தகச் சுருளில் என்னைக் குறித்து எழுதியிருக்கிறது என்று சொன்னேன் என்றார். நியாயப்பிரமாணத்தின்படி செலுத்தப்பட்டு வருகிற பலிகளைக் குறித்து மேற்சொல்லியபடி: பலியையும்,காணிக்கையையும்,சர்வாங்கத் தகன பலிகளையும்,பாவ நிவாரண பலிகளையும் நீர் விரும்பவில்லை,அவைகள் உமக்குப் பிரியமானதல்ல என்று சொன்ன பின்பு: தேவனே,உம்முடைய சித்தத்தின்படி செய்ய,இதோ,வருகிறேன் என்று சொன்னார். இரண்டாவதை நிலைநிறுத்துவதற்கு முதலாவதை நீக்கிப்போடுகிறார். இயேசுகிறிஸ்துவினுடைய சரீரம் ஒரே தரம் பலியிடப்பட்டதினாலே,அந்தச் சித்தத்தின்படி நாம் பரிசுத்தமாக்கப்பட்டிருக்கிறோம்” (எபிரெயர் 10:1-10).
"அந்தச் சித்தத்தின்படி” நம்முடைய எல்லாப் பாவங்களையும் எடுத்துக் கொள்ளவும் அதற்கு ஒரே தரம் நியாயந்தீர்க்கப்படவும் தம் ஜீவனை அர்ப்பணித்து புதிதாக்கினார்.,
,ஆகவே நாம் பரிசுத்தரானோம், ‘நாம் பரிசுத்தமாக்கப் பட்டிருக்கிறோம்’ (எபிரெயர் 10:10) என்பது இறந்த காலத்தில் எழுதப்பட்டுள்ளது. அதன் பொருள் பாவ விடுதலையைக் குறித்து மீண்டும் குறிப்பிடத் தேவையில்லை என்பதாகும். நீங்கள் பரிசுத்தமாக்கப் பட்டுள்ளீர்கள். ,
,"அன்றியும்,எந்த ஆசாரியனும் நாடோறும்,ஆராதனை செய்கிறவனாயும்,பாவங்களை ஒருக்காலும் நிவிர்த்தி செய்யக்கூடாத ஒரே வித பலிகளை அநேகந்தரம் செலுத்தி வருகிறவனாயும் நிற்பான். இவரோ,பாவங்களுக்காக ஒரே பலியைச் செலுத்தி,என்றென்றைக்கும் தேவனுடைய வலது பாரிசத்தில் உட்கார்ந்து,இனித் தம்முடைய சத்துருக்களைத் தமது பாதபடியாக்கிப் போடும் வரைக்கும் காத்துக் கொண்டிருக்கிறார். ஏனெனில் பரிசுத்தமாக்கப் படுகிறவர்களை ஒரே பலியினாலே இவர் என்றென்றைக்கும் பூரணப் படுத்தியிருக்கிறார்.” (எபிரேயர் 10:11-14)
நீங்கள் நிரந்தரமாக பரிசுத்தமாக்கப்பட்டுள்ளீர்கள். நாளை நீ ஒரு பாவஞ்செய்தால் நீ மறுபடியும் பாவியாகிவிடுவாயா?அப்பாவங்களையும் இயேசு எடுத்துக்கொள்ளவில்லையா?அவர் எடுத்துக்கொண்டார். எதிர்காலப் பாவங்களையும் அவர் எடுத்துப் போட்டார்.,
"இதைக் குறித்துப் பரிசுத்த ஆவியானவரும் நமக்குச் சாட்சி சொல்லுகிறார்; எப்படியெனில்;அந்த நாட்களுக்குப் பின்பு நான் அவர்களோடே பண்ணும் உடன்படிக்கையாவது;நான் என்னுடைய பிரமாணங்களை அவர்களுடைய இருதயங்களில் வைத்து,அவைகளை அவர்களுடைய மனதில் எழுதுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறாரென்பதை உரைத்த பின்பு,அவர்களுடைய பாவங்களையும் அவர்களுடைய அக்கிரமங்களையும் நான் இனி நினைப்பதில்லை என்பதைச் சொல்லுகிறார். இவைகள் மன்னிக்கப்பட்டதுண்டானால்,இனிப் பாவத்தினிமித்தம் பலி செலுத்தப் படுவதில்லையே.” (எபிரேயர் 10:15-18).
‘இனிப் பாவத்தினிமித்தம்’ என்பதன் பொருள் அவர் உலகின் பாவங்களையெல்லாம் ஒழித்து விட்டார் என்பதாகும். இயேசுவே நம் இரட்சகர். என்னுடைய இரட்சகரும் உன்னுடைய இரட்சகருமாவார். இயேசுவை விசுவாசிப்பதன் மூலம் நாம் இரட்சிக்கப்பட்டோம். இதுவே இயேசுவினுள் கிட்டும் விடுதலை,இதுவே மிகப்பெரும் கிருபை மற்றும் கர்த்தரின் மிகப்பெரும் பரிசு. எல்லாப் பாவங்களினின்றும் விடுதலைப் பெற்ற நீயும் நானும்,அனைவரிலும் அதிகமாக ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!,*